துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் ஆடைகள் திருட்டு
பெரம்பூர் அருகே துணிக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.9 லட்சம் மதிப்பிலான ஆடைகளை திருடி சென்றனர்.
திரு.வி.க நகர்,
சென்னை ராயபுரம் தொப்பை தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 36). இவர் பெரம்பூரை அடுத்த பெரம்பூர் பேரக்ஸ் சாலை ராம்நகரில் பிரபல நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2 வருடங்களாக துணிக்கடை நடத்தி வருகிறார்.
இங்கு ஆண்களுக்கு தேவையான ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உயர்ரக சட்டைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த கடையில், கொளத்தூரை சேர்ந்த கார்த்திக் (20) என்பவர் உள்பட 2 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் நேற்று காலை கார்த்திக் வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், உரிமையாளர் கோபிநாத்துக்கு தகவல் தெரிவித்தார்.
கோபிநாத் அறிவுரையின் பேரில் கார்த்திக் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஏராளமான ஆடைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் திரு.வி.க நகர் மற்றும் பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடையில் இருந்த சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான ஆடைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் அடங்கிய ‘ஹார்டிஸ்க்’ திருடு போயிருந்தது. பணப்பெட்டி உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
அதேபோல் பக்கத்தில் இருந்த துணிக்கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு, ஒரு சில ஆடைகள், கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் அடங்கிய ஹார்டிஸ்க், மற்றும் ரூ.500 ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
கடையில் வேலை செய்து வந்த முன்னாள் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கோபிநாத் போலீசிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து திரு.வி.க நகர் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story