விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கான தொகை வழங்காததை கண்டித்து சாலை மறியல்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கான தொகை வழங்காததை கண்டித்து தாணிக்கோட்டகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தாணிக்கோட்டகம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கான தொகை வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளை செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். கட்சியை சேர்ந்த குணசேகரன், கோபால், முருகேசன், தூண்டி, வீரையன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சிவகுரு.பாண்டியன், நாகராஜன் ஆகியோர் பேசினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் சங்கர், மண்டல துணை தாசில்தார் முருகு, கொள்முதல் அலுவலர் அன்பரசு, தரக்கட்டுப்பாட்டு துணை மேலாளர் பாரதி, வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்துபோன நிலையில், சம்பா சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் அதுவும் மழை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் தாணிக்கோட்டகம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தனர். ஆனால் நெல்லை விற்பனை செய்த விவசாயிகளுக்கு 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அவர்களுக்குரிய தொகை வழங்கப்படவில்லை. எனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நெல்லுக்கானை தொகையை உடனே வழங்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் நெல்லுக்கான தொகை வழங்கப்படுவதை கைவிட்டுவிட்டு விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு இன்னும் 2 நாட்களில் தொகை அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அதிகரிகள் உறுதியளித்தனர். இன்னும் 2 நாட்களில் நெல்லுக்கான தொகை வரவு வைக்கப்படவில்லை என்றால் தாணிக்கோட்டகம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை வீட்டிற்கு எடுத்து சென்றுவிடுவோம் என்று மறியில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சாலை மறியல் போராட்டத்தால் தாணிக்கோட்டகம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story