டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை செய்ததாக 2 பேர் கைது 186 மதுபாட்டில்கள் பறிமுதல்


டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை செய்ததாக 2 பேர் கைது 186 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். பாரில் இருந்து 186 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே பார் இயங்கி வருகிறது. இந்த பாரை மன்னார்குடி மேலநத்தம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது37) என்பவர் அரசு அனுமதி பெற்று நடத்தி வருகிறார். பார்களில் மதுபானங்கள் விற்க கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் சத்தியமூர்த்தியின் பாரில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்துக்கு புகார் வந்தது.

அதன்பேரில் திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று மன்னார்குடி பந்தலடியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இதனையடுத்து பாரின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, பார் ஊழியர் அடச்சேரியை சேர்ந்த மகேஷ் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பாரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 186 மதுபாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், திருவாரூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருவாரூர் மதுவிலக்கு போலீசார் சத்தியமூர்த்தி, மகேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது பந்தலடி பகுதியில் டாஸ்மாக் பார் அருகே மது விற்பனை செய்த வாலிபர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story