முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்காததை கண்டித்து ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்


முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்காததை கண்டித்து ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2018 3:00 AM IST (Updated: 14 March 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்காததை கண்டித்து ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பாரத ஸ்டேட் வங்கியில் முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்காததை கண்டித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் கீழரத வீதியில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக சென்றனர். அவர்கள் வங்கி அருகே சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாரத பிரதமர் அறிவித்த முத்ரா திட்டத்தின்கீழ் வியாபாரிகளுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கியில் விண்ணப்ப படிவம் வழங்குவதில்லை. மேலும் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு செய்கின்றனர் என்று தெரிவித்துடன் உடனடியாக இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் உடனடியாக விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் பிரதமர், நிதி மந்திரி ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளனர்.


Next Story