தெரணி-கூத்தனூரிலுள்ள மலைகளில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
தெரணி, கூத்தனூரிலுள்ள மலைகளில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாறைகளை பிளக்கும் போது ஏற்படும் வெடி சத்தத்தால் குழந்தைகள், பெண்கள் அச்சப்படுவதாக குற்றம் சாட்டினர்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே தெரணி கிராமத்தில் சுமார் 3,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். எனினும் சிலர் கல் உடைக்கும் கூலி தொழிலாளர்களாகவும் வேலை செய்து வருகின்றனர். தெரணி பகுதியை ஒட்டிய பெருமாள் மலையில் கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து வீரியமான வெடி மருந்துகளை கொண்டு பாறைகளை பிளக்க செய்வதால் அதிர்வு ஏற்பட்டு வீட்டின் சுவர்களில் விரிசல் விழுவதாகவும், ஆழ்குழாய் கிணற்றில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் குற்றசாட்டுகளை முன்வைத்து கல்குவாரி செயல்பாட்டை நிறுத்துமாறு அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீரென கல் குவாரி ஏலம் நடைபெறுவதை கிராம மக்கள் அறிந்தனர். இதை யடுத்து தெரணி பகுதி மலையை கல்குவாரி ஏலத்தில் நிறுத்தி வைக்க வேண்டும், மேலும் நிரந்தரமாக கல்குவாரியை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாடாலூர்- கொளக்காநத்தம் சாலை தெரணி பஸ் நிறுத்தத்தில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கல்குவாரி யினால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்து அழிவிலிருந்து மீட்டெடுப்போம்... என கோஷம் எழுப்பினர். மேலும் கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் உள்ளிட்டவை கிணற்றில் படர்வதால் தண்ணீர் மாசு அடைகிறது. வெடிமருந்து படிந்த புல்வெளியை கால்நடைகள் மேய்வதால் அவைகளும் பாதிப்படைகின்றன. எனவே கல்குவாரி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு எடுத்து கூறினர். அதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்து விட்டு சென்றனர். அப்போது தெரணி மலையை கல்குவாரி ஏலத்தில் விற்காமல் அதனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் வருவாய்துறை அதிகாரி ஒருவர், அந்த கிராம மக்களிடம் தெரணி மலை கல் குவாரி ஏலத்திற்கு வராது என கூறியதாக தெரிகிறது. அப்போது, கிராம மக்கள் மலை ஏலம் விடப்பட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் தெரணி பஸ் நிறுத்த பகுதியில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே பாடாலூர் அருகே கூத்தனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் பகுதியிலுள்ள இயற்கை வளங்களில் ஒன்றான மலையை, கல்குவாரி ஏலத்தில் விற்பனை செய்யக்கூடாது எனக்கூறி செட்டிக்குளம்-பாடாலூர் சாலை கூத்தனூர் பஸ்நிறுத்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். கல் குவாரியின் வெடிசத்தத்தை தாங்கி கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் அச்சப்படுகின்றனர் என குற்றம் சாட்டினர். இதையறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவகுமார், ஆலத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story