காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்
கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று நரேந்திர சுவாமி எம்.எல்.ஏ. கூறினார்.
ஹலகூர்,
மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே கெம்பய்யனதொட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏரி ஒன்று இருக்கிறது. இந்த ஏரிக்கு சிம்சா நதியில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் நிரப்பும் திட்டம் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தநிலையில் இத்திட்டத்தின் பணிகள் முடிவடைந்து நேற்று முன்தினம் ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நரேந்திரசுவாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிம்சா நதியில் இருந்து ஏரிக்கு வந்தடைந்த தண்ணீருக்கு பூஜை செய்தார். பின்னர் கிராம மக்களும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் நரேந்திரசுவாமி எம்.எல்.ஏ. பேசுகையில், “ஹலகூரை சுற்றி 24 ஏரிகள் உள்ளன. இதில் கெம்பய்யனதொட்டி கிராமத்தில் உள்ள ஏரியில் மட்டும் தண்ணீர் நிரப்ப திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மீதமுள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்ப திட்டம் தீட்டி செயல்படுத்துவேன். மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீர்ப்பாசன திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மக்களுக்கு சேவை செய்வதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இப்பணி எனக்கு கடவுள் கொடுத்த பணி. இந்த பணியை நான் தொடர்ந்து செய்வேன்.
இந்த ஏரியில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் தண்ணீர் நிரப்பப்படுகிறது. ஏரி நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் பெருகும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தாலுகா பஞ்சாயத்து தலைவர் விஸ்வாஷ், துணைத்தலைவர் மாது, உறுப்பினர் சாவித்திரியம்மா மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story