சகன் புஜ்பால் கே.இ.எம்.ஆஸ்பத்திரியில் அனுமதி


சகன் புஜ்பால் கே.இ.எம்.ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 14 March 2018 3:58 AM IST (Updated: 14 March 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சகன்புஜ்பால் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி சகன் புஜ்பால் ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை டாக்டர்கள் தீவிரமாக பரிசோதித்த னர். இதில், அவர் ஆஸ்துமா மற்றும் கணைய அலற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில், சகன் புஜ்பாலுக்கு மேலும் 2 மருத்துவ பரிசோதனைகள் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் அந்த வசதி ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் இல்லை. இதையடுத்து அந்த பரிசோதனைகளை பரேலில் உள்ள கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனையில் செய்வதற்கு சகன் புஜ்பாலை அந்த மருத்துவமனையில் சேர்க்க அனுமதி கோரி அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை நடந்து வரும் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு சகன் புஜ்பாலை கே.இ.எம். மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று அவர் அங்கு சேர்க்கப்பட்டார்.

Next Story