நெல்லை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது
நெல்லை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்வதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. குற்றாலம் பகுதியில் சற்று கனமழை பெய்ததால், அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பாபநாசம் உள்பட அனைத்து அணைகளும் வறண்டு வருகின்றனர். இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.
நேற்று 2-வது நாளாகவும் மழை பெய்தது. நெல்லை, பாளையங்கோட்டை, டவுன், சந்திப்பு, பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் பகலில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் சிறிதளவு தண்ணீர் தேங்கி நின்றது.
இதேபோன்று மாவட்டத்தில் களக்காடு, பணகுடி, பாபநாசம், மணிமுத்தாறு, சேரன்மாதேவி, அம்பை, சிவகிரி, சேர்வலாறு, செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் பகுதிகளிலும் மழை பெய்தது. இதில், தென்காசி, குற்றாலம் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு சற்று கனமழை பெய்தது.
இதனால், வறண்டு காணப்பட்ட குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. மெயின் அருவியில் சற்று கூடுதலாக தண்ணீர் கொட்டி வருகிறது. ஐந்தருவியில் 4 அருவிகளில் மட்டும் தண்ணீர் விழுந்தது. விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையக்கருங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கல்சுண்டு காலனி பகுதியில் பால்ராஜ் என்பவர் பயிரிட்டிருந்த சுமார் 500 வாழைகள் காற்றில் சாய்ந்தது.
களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாமரைகுளம் பத்துக்காடு பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் சேதமடைந்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 10 ஏக்கர் நெற் பயிர்கள் முழுவதுமாக சேதமாகின. மழை நீடித்து வருவதால் களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தடைபட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -39, மணிமுத்தாறு -15, சேரன்மாதேவி 13, அம்பை -10, பாளையங்கோட்டை -7, சிவகிரி -4, சேர்வலாறு -3, கருப்பாநதி -3, குண்டாறு -2, நெல்லை -2, ஆய்குடி -1, செங்கோட்டை -1.

Related Tags :
Next Story