இடி, மின்னலுடன் பலத்த மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நாகர்கோவில்,
இந்திய பெருங்கடல் பகுதியில் குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு சுமார் 10 மணி அளவில் தொடங்கிய மழை சுமார் 11.30 மணி வரை இடை விடாது பெய்தது. முதலில் தூறல்களாக தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல வெளுத்து வாங்கியது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவில் நகரில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. இதனால் பெரும்பாலான சாலைகளில் துர்நாற்றம் வீசியது. மேலும், மழை ஓய்ந்த பின்னர் சாலைகளில் குப்பைகளாக காட்சி அளித்தது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அதிகபட்சமாக ஆனை கிடங்கு மற்றும் மயிலாடி பகுதிகளில் தலா 35 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–
நாகர்கோவில்– 18.8, நிலப்பாறை– 24, இரணியல்– 12.4, குளச்சல்– 14, குருந்தன்கோடு– 24.2, அடையாமடை– 17, கோழிப்போர்விளை– 30, திற்பரப்பு– 26.4, பூதப்பாண்டி– 16.5, சுருளோடு– 32, கன்னிமார்– 15.2, பாலமோர்– 31.6, ஆரல்வாய்மொழி– 15.8, கொட்டாரம்– 22 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இதுபோன்று அணைப்பகுதிகளில், பேச்சிப்பாறை– 15.6, பெருஞ்சாணி– 21.4, சிற்றார் 1– 22, சிற்றார் 2– 2, மாம்பழத்துறையாறு– 15 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
மழை காரணமாக, இரணியல் வள்ளியாற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. மேலும் குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் 200 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று நீர்வரத்து அதிகரித்து 300 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும், பெருஞ்சாணி அணைக்கு 18 கனஅடி தண்ணீர் வருகிறது.
அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 655 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Tags :
Next Story