மரண பயத்துடன் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பிய விசைப்படகு மீனவர்கள்
கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற குளச்சல் மீனவர் தனது அனுபவத்தை தெரிவித்தார். ஒகி புயலை போன்று மற்றொரு இயற்கை சீற்றத்தில் சிக்கி விடுவோமோ என்று அஞ்சி மரண பயத்துடனேயே கரைக்கு வந்ததாக கூறினார்.
குளச்சல்,
குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்கள் மூலமும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 12 நாட்கள் வரை கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து வருவது வழக்கம்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இதன் காரணமாக குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
அதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகளும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்தனர். மேலும், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை உடனே கரை திரும்பவும் கேட்டுக் கொண்டனர்.
இந்தநிலையில் ஆழ்கடலுக்கு சென்ற தேங்காப்பட்டணம், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த ஏராளமான விசைப்படகு மீனவர்கள், இதுபற்றி தகவல் அறிந்ததும் அவசர அவசரமாக கரை திரும்பினார்கள். அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தினர். அவ்வாறு கரை திரும்பிய ஒரு சில படகுகளில் குறைந்த அளவு மீன்கனே கிடைத்தன. பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் மீன்கள் இல்லாமலேயே திரும்பி வந்தனர்.
இதுகுறித்து கரை திரும்பிய விசைப்படகு மீனவர் கிங்சன் கூறியதாவது:–
நாங்கள் கடந்த 7–ந் தேதி ஆழ்கடலுக்கு 15 பேருடன் மீன்பிடிக்க சென்றோம். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான 2 ஆயிரம் லிட்டர் டீசல், மீன்களை பதப்படுத்த 300 பெரிய ஐஸ்பார்கள், குடிநீர், உணவு என அனைத்து ஏற்பாடுகளுடன் சென்றோம். நாங்கள் கரையில் இருந்து 65 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது, கடல் பகுதியில் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் தான் 11–ந் தேதி அதிகாலை மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மீனவர்கள் உடனே கரை திரும்பும் படி அதிகாரிகளின் எச்சரிக்கை அறிவிப்பை வயர்லெஸ் கருவி மூலம் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஒகி புயலினால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருள் இழப்பில் இருந்து மீளமுடியால் இருந்து வருகிறோம். அதற்குள் மற்றொரு இயற்கை சீற்றத்தில் சிக்கி விடுவோமோ என்று நினைத்தோம். உயிர் பிழைத்தால் போதும் என்ற மரண பயத்துடன் அவசர அவசரமாக கரை திரும்பினோம்.
இதனால் அதிக முதலீடு செய்து மீன்பிடிக்க சென்ற எங்களுக்கு இந்த திடீர் இயற்கை மாற்றத்தால் மீன்கள் பிடிக்க முடியாமல், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மீனவர்கள் நேற்று குளச்சல் கடற்கரை பகுதியில் நின்று கரைமடி வலைகள் மூலம் கடலில் மீன்பிடித்தனர். இதில் சாளை வகை மீன்கள் குறைந்த அளவு கிடைத்தன. குளச்சல் கடல் நேற்று சீற்றமாகவே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story