மாற்றுச்சான்றிதழ் பெற்று செல்லும்படி கூறியதால் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்
மாற்றுச்சான்றிதழ் பெற்று செல்லும்படி கூறியதால் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை வைசியாள் வீதியில் 90 ஆண்டு பழமையான ஆரிய வைசிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இருபாலரும், 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவிகள் மட்டும் படித்து வருகின்றனர்.
தற்போது இந்த பள்ளியில் 70 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.
இதனிடையே பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் பள்ளி கட்டிடம் பழமையானதாக உள்ளதால், அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. எனவே இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளிக்கட்டிடத்தை புனரமைக்கவும், மாணவ-மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவ-மாணவிகளின் பெற்றோரை அழைத்து மாற்றுச்சான்றிதழை (டி.சி.) பெற்று செல்லும்படி கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த பெரியகடை வீதி போலீசார், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஏழை மக்களின் குழந்தைகள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த பள்ளி சுமார் 90 ஆண்டுகள் பழமையானது. தற்போது பள்ளி கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது. இங்கு 70 மாணவ-மாணவிகளும், 6 ஆசிரியைகளும் உள்ளனர். திடீரென்று பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவ- மாணவிகளிடமும் மாற்றுச்சான்றிதழ்களை பெற்றுச் செல்லும்படி வற்புறுத்து கின்றனர்.
இதனால் எங்களது குழந்தைகளை இங்கிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ள வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பள்ளியை தொடர்ந்து நடத்த பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. எனவே தமிழக அரசு இந்த பள்ளியை ஏற்று நடத்த வேண்டும். இதுவரை 11 பேர் தங்கள் குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழை பெற்று சென்று விட்டனர். மேலும் பள்ளி கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கூட நுழைவு வாசல் அருகில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
அதில், முழு ஆண்டு தேர்வு முடியும் வரை பள்ளி தொடர்ந்து நடைபெறும். விருப்பம் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளை இங்கேயே தொடர்ந்து படிக்க வைக்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் மாற்றுச்சான்றிதழ் பெற்று செல்லலாம் என்று எழுதப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story