கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை தலைவர் அரங்கநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழக அரசு சத்துணவு, அங்கன்வாடி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையாத ஆஸ்பத்திரிகள் மற்றும் வெளி மாநில ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றால், அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் உடனடியாக வழங்க வேண்டும்.
தொடர் சிகிச்சை பெற வேண்டிய நோய்களுக்கு உச்சவரம்பை தளர்த்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் மாவட்டந்தோறும் காப்பீட்டு நிறுவனம், ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகள், டாக்டர்கள் குழு ஆகியோர் அடங்கிய மருத்துவ காப்பீட்டு குறை களைவு குழு அமைக்க வேண்டும்.
இந்த குழு மாவட்ட கருவூல அதிகாரி வழி நடத்தும் வகையில் அமைக்கப்பட்டு மாதந்தோறும் கூட்டப்பட்டு குறைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் சந்திரன், பொருளாளர் நடராஜன், பழனிசாமி, பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Tags :
Next Story