ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை குறித்த பயிற்சி


ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை குறித்த பயிற்சி
x
தினத்தந்தி 15 March 2018 4:00 AM IST (Updated: 15 March 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை குறித்த ஒரு நாள் பயிற்சி தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் நடைபெற்றது.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை குறித்த ஒரு நாள் பயிற்சி தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் நடைபெற்றது. ராஜமாணிக்கம் வரவேற்று பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தா.பழூர் இந்தியன் வங்கி மேலாளர் சந்திரசேகர் பணமில்லா பரிவர்த்தனை குறித்து பல்வேறு கருத்துக்களை வழங்கினார். இப்பயிற்சியில் ஆன்லைனில் பணபரிவர்த்தனை செய்து வரவு, செலவுகளை பராமரிப்பது மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, அல்லிராணி, இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தா.பழூர் ஒன்றியத்திலுள்ள 33 ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story