தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் முற்றுகை போராட்டம்
தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ள லஞ்ச போக்கை கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் முற்றுகை போராட்டம்.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட கிளையின் சார்பில், பொதுமாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும். தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ள லஞ்ச போக்கை கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட தொடக்கல்வி அலுவலகத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலர் குணசேகரனை முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ், மாவட்ட செயலாளர் வின்சென்ட், மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story