மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி,
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
இந்திய பெருங்கடலில் குமரிக்கு தெற்கே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் இருந்தே இப்பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது. இரவில் பலத்த மழை பெய்தது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. இதை அறியாமல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களும், சுற்றுலா பயணிகளும் குற்றாலம் அருவிகளுக்கு வந்து குவிந்தனர். மெயின் அருவியில் தண்ணீர் அருவியின் முன்புறம் உள்ள பாதுகாப்பு வளைவை தாண்டி விழுந்தது.
குளிக்க தடை
இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குற்றாலத்தில் தண்ணீர் விழுவதை கேள்விப்பட்டதும் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு குளிக்க வந்தனர். அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பலர் புலியருவியில் குளித்து சென்றனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
நேற்று மதியம் 1 மணிக்கு தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், ஆய்க்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் தென்காசி சிற்றாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Related Tags :
Next Story