பெண்ணுக்கு அரிவாள் வெட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வலைவீச்சு
முத்துப்பேட்டை அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் புதுரோட்டை சேர்ந்தவர் காத்தமுத்து. இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த இளங்கோ, இளங்கோவின் தந்தை ராமச்சந்திரன், தாய் ராணி ஆகிய 3 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இளங்கோ, ராமச்சந்திரன், ராணி ஆகியோருக்கும், பாப்பாத்திக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது இளங்கோ அரிவாளால் பாப்பாத்தியை வெட்ட சென்றார்.
இதை தடுக்க முயன்றபோது பாப்பாத்தியின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பாத்தி முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ, இளங்கோவின் தந்தை ராமச்சந்திரன், தாய் ராணி ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story