பூம்புகார், தரங்கம்பாடியில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
பூம்புகார், தரங்கம்பாடியில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
திருவெண்காடு,
பூம்புகார், வானகிரி, கீழமூவர்க்கரை, திருமுல்லைவாசல், பழையாறு, தரங்கம்பாடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட விசை படகுகள் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வானிலை மாற்றம் காரணமாக இந்திய பெருங்கடலில் குமரிக்கு தெற்கே 4 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. அது மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 10-ந் தேதி முதல் பூம்புகார், வானகிரி, கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரை உள்ளிட்ட கிராமங்களில் கடல் பகுதியில் சீற்றமும், பலத்த காற்றும் வீசுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதுகுறித்து பூம்புகார் பகுதி மீனவர்கள் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக வானிலை மாற்றம் மற்றும் வடகிழக்கு பருவமழையால் மீன்பிடி தொழில் மிகவும் மந்தமாக இருந்தது. அந்த நிலைமாறி தற்போதுதான் கடந்த சில நாட்களாக மீன்பிடி தொழில் சூடுபிடிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளோம். இதனால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை 2 மாதங்கள் மீன்பிடிக்க தடை காலம் தொடங்க உள்ளது. இந்தநிலையில் தற்போது கடல் சீற்றத்தால் மீன்பிடிக்க செல்லாதது வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் தரங்கம்பாடி, சந்திரபாடி, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றத்தால் 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Related Tags :
Next Story