பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் 26-ந்தேதி குடியேறும் போராட்டம்
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி,
பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் நடந்தது. மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் மார்ட்டின், புதூர் ஒன்றிய செயலாளர் வேல்சாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
கடந்த 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் ஒரு சில ஊர்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. எனவே பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டு மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ரூ.29 கோடியே 42 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதனை வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனை மாவட்ட நிர்வாகம் விசாரித்து அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
வருகிற 24-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு குளறுபடிகளை நீக்கி, பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இல்லையெனில் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story