கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் அனைத்துதுறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
குடியிருப்போர் நலசங்க கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன், ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மாநில செயலாளர் புருஷோத்தமன் கண்டன உரையாற்றினார்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஓய்வூதியர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி சிகிச்சைக்கான தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், இதற்கான ஒப்பந்தம் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் எழிலன், குழந்தைவேலு, ராஜேந்திரன், தனுசு, கருணாகரன், ஆதவன், காசிநாதன் மற்றும் வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார். முன்னதாக தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story