நெல்லையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,

ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பெருந்திரள் முறையீடு என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
மருத்துவ காப்பீடு
ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை தபால் மூலம் விரைவில் அனுப்பிவைக்க வேண்டும். மருத்துவமனை நிர்ணயம் செய்யும் தொகையை காப்பீடு நிறுவனம் குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும். எல்லா மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் செந்தில்ஆறுமுகம், கோபாலன், அபுபக்கர், ராஜேசுவரன், இணை செயலாளர்கள் சலீம் முகமது மீரான், துரை டேனியல், ரத்தினம், பொருளாளர் வைகுண்டமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story