பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக ரெயிலில் கூடுதல் பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்படுவர்
ரெயிலில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக கூடுதல் பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட உள்ளதாக, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஐ.ஜி.பாரி தெரிவித்தார்.
செங்கோட்டை,

இதுகுறித்து அவர் செங்கோட்டையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயணிகளுக்கு பாதுகாப்பு
ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.
அவசர எண்.182-ன் மூலம் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கும் பயணிகளை உடனே அணுகி, பிரச்சினைகளை தீர்த்து வருகிறோம். தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதியில் குற்றவாளிகள் நடமாட்டத்தை தடுக்கவும், குற்றங்களை தவிர்க்கவும் 4 ஆயிரத்து 200 பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் பெண் கமாண்டோக்கள்
இந்த ஆண்டு பெண்களின் பாதுகாப்பு ஆண்டாக கொண்டாடி வருகிறோம். பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். விரைவில், இவர்களின் பாதுகாப்புக்காக ரெயில்களில் கூடுதல் பெண் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கு தேவையான கூடுதல் பெண் கமாண்டோக்களை தேர்வு செய்ய மத்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த பெண் கமாண்டோக்கள், ரெயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வர். சந்தேகத்திற்கு இடமான பெண்கள் சோதனை செய்வது, பெண்கள் பெட்டியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது, பெண்களுக்கு தொல்லை தருவோரை அடையாளம் கண்டு பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர்.
கண்காணிப்பு கேமராக்கள்
ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் 86 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், நெல்லை ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story