புனே, பால்கரில் பயங்கர தீ விபத்து 3 பேர் உடல்கருகி சாவு
புனே மற்றும் பால்கரில் நடந்த தீ விபத்துகளில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
வசாய்,

தீ விபத்து
புனே சிவாஜி நகரில் உள்ள ஹிமாலயா எஸ்டேட் என்ற கட்டிடத்தில் அச்சகம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்ததும் ஊழியர்கள் அச்சகத்தை மூடிவிட்டு உள்ளே படுத்து இருந்தனர்.
இந்தநிலையில், அதிகாலை 3 மணியளவில் அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அச்சகத்தின் ஷட்டரை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து உள்ளே எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
உடல் கருகி 2 பேர் பலி
பின்னர் உள்ளே சென்று தேடிப்பார்த்த போது, அச்சகத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் இருவரும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் அவர்களது உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு விபத்து
பால்கர் மாவட்டம் தகானுவில் உள்ள காசா பகுதியில் 2 மாடிகள் கொண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் மளிகைக்கடைகள் உள்ளன. முதல் தளம் மளிகை பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கட்டிடத்தின் 2-வது தளத்தில் 4 வீடுகளில் மக்கள் வசித்து வந்தனர்.
நேற்று அதிகாலை திடீரென அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அந்த நேரத்தில் குடியிருப்புவாசிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். புகை சூழ்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட பின்னர் தான் அவர்களுக்கு கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் பதறிப்போன அவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடிவந்தனர்.
ஒருவர் சாவு
6 பேர் வெளியே வர முடியாமல் உதவி கேட்டு அலறினார்கள். தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாடியில் சிக்கி இருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்தநிலையில், தீ விபத்து ஏற்பட்ட முதல் மாடியில் இருந்து ஒருவர் உடல்கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தீயில் சிக்கி உயிரிழந்த அவரது பெயர் ஆசிஸ் வாஷிர் விரானி் (வயது46) என்பதும், அவர் மளிகைக்கடை உரிமையாளர்களில் ஒருவர் என்பது தெரியவந்தது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்து உள்ளது.
சம்பவம் குறித்து காசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story