கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய நெல் சாகுபடி
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கம்பம், மார்ச்.15-
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லை பெரியாறு தண்ணீரை நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடியும், 5 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பில் ஒரு போக நெல் சாகுபடியும் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் நிலங்கள் தரிசாக காணப்பட்டன. இந்தநிலையில் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல்சாகுபடி நடந்து முடிந்தது. அதன்பின்னர் மழைப்பொழிவு குறைந்து, முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் குறைந்து விட்டது. தற்போது அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது சுருளிப்பட்டி முல்லைப்பெரியாறு தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் உத்தமுத்து கால்வாய்க்கு கீழ்ப்புறத்தில் உள்ள சில வயல்களில் நெல் பயிரிட்டுள்ளனர். இது, வறட்சியை தாங்கி வளரக்கூடிய கேரள குத்தரசி என்னும் வகையை சேர்ந்த குறுகிய காலப்பயிர் ஆகும். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கோடைகாலத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய கேரள குத்தரசி என்று அழைக்கப்படுகிற (சிவப்பு மட்டை அரிசி) நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது, 75 நாட்களில் மகசூல் கொடுக்கும் தன்மை கொண்டது. ஏப்ரல் மாத இறுதிக்குள் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த பயிருக்கு அதிக அளவு தண்ணீர் தேவையில்லை என்றனர்.
Related Tags :
Next Story