குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தட்டு ஏந்தி போராட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவிலில் உள்ள கிராம குடிநீர் திட்டக்கோட்ட அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவிலில் உள்ள கிராம குடிநீர் திட்டக்கோட்ட அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் கடந்த 8–ந் தேதி தொடங்கியது. குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் கோரிக்கை தொடர்பான கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தை கண்டித்தும், கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக கஞ்சி காய்ச்சும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். 8–வது நாளான நேற்று குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சங்க தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story