எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது: குமரி மாவட்டத்தில் 24,122 மாணவர்கள் எழுதுகிறார்கள்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் 24,122 மாணவ– மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
நாகர்கோவில்,
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 மற்றும் பிளஸ்–1 மாணவ–மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 20–ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் இந்த தேர்வை 426 பள்ளிகளைச் சேர்ந்த 12,051 மாணவர்களும், 12,071 மாணவிகளுமாக மொத்தம் 24,122 பேர் எழுதுகிறார்கள். இதற்காக நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலும் சேர்த்து 111 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான வினாத்தாள்கள் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் வந்தன. அவை அந்தந்த கல்வி மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இன்று காலையில் வினாத்தாள்கள் அந்தந்த கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. முதல் நாளான இன்று மொழிப்பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.
முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தேர்வு மையங்கள் ஒவ்வொன்றுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா தலைமையில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுத வருபவர்களும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு மையங்களில் செல்போன்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் காப்பியடிக்க முயல்பவர்களுக்கும், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் விதிமுறைகளின்படி உரிய தண்டனை வழங்கப்படும் என்றும், ஒழுங்கீனச் செயல்களுக்கு பள்ளி நிர்வாகம் உடந்தையாகவோ? ஊக்குவிக்கவோ முயலுமானால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்வதோடு, பள்ளி அங்கீகாரத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் எச்சரித்துள்ளார்.

Related Tags :
Next Story