புத்தன்துறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்


புத்தன்துறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 15 March 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

புத்தன்துறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அழகியமண்டபம்,

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய், மணல் போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.

இந்தநிலையில், மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உள்பட்ட புத்தன்துறை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, புத்தன்துறை ரே‌ஷன் கடை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மூடைகளில் 500 கிலோ ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டனர். இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புகாடு அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும், ரே‌ஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story