தஞ்சையில் அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் சாவு 2 மீன் வியாபாரிகள் கைது
தஞ்சையில், அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மீன் வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கீழவாசல் டபீர்குளம்ரோடு குறிச்சி புதுத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் கார்த்திகேயன் என்கிற குரங்கு கார்த்திக்(வயது 26). இவர் மீது தஞ்சை மேற்கு மற்றும் கிழக்கு போலீஸ் நிலையத்தில் அடிதடி, மிரட்டல் உள்பட 5 வழக்குகள் உள்ளன. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழவாசல் பகுதியை சேர்ந்த காதர் உசேனை மிரட்டி ரூ.200 பறித்தார்.
நேற்று முன்தினம் மதியம் டபீர்குளம் ரோட்டில் நின்று கார்த்திகேயனும், அவரது நண்பரான சியாமளா அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமனும்(27) பேசிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக மீன் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் கீழவாசல் சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்த ஷாஜகான்(23), தனது நண்பரும், இன்னொரு மீன் வியாபாரியுமான விஜய்(23) என்பவருடன் சென்றார்.
அப்போது கார்த்திகேயன் அருகில் சென்ற ஷாஜகான், எதற்காக எனது சித்தப்பா காதர் உசேனை மிரட்டி பணம் பறித்தாய்? என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் கார்த்திகேயனுக்கு ஆதரவாக ஜெயராமனும், ஷாஜகானுக்கு ஆதரவாக விஜய்யும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஷாஜகானை வெட்ட முயன்றார். இதனால் உஷாரான ஷாஜகான், அந்த அரிவாளை பிடுங்கி கார்த்திகேயனை வெட்டினார். அதை தடுக்க வந்த ஜெயராமனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை பார்த்த அக்கம், பக்கத்தினர் தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். ஜெயராமனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகான், விஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story