தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அம்மா திட்ட முகாம்
தமிழகத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் அம்மா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இன்று (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தாலுகாவில் மீளவிட்டான் பகுதி–2 கிராமம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் சிவகளை, திருச்செந்தூர் தாலுகாவில் மானாடுதண்டுபத்து, சாத்தான்குளம் தாலுகாவில் ஸ்ரீவெங்கடேசுவரபுரம், கோவில்பட்டி தாலுகாவில் வில்லிசேரி பகுதி–2, விளாத்திகுளம் தாலுகாவில் சூரங்குடி, எட்டயபுரம் தாலுகாவில் கட்டராமன்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஆதனூர், கயத்தாறு தாலுகாவில் கடம்பூர் ஆகிய கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களுக்கு அந்தந்த தாசில்தார்கள் தலைமை தாங்குகிறார்கள்.
கோரிக்கை மனு
முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் கொடுக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story