மனுநீதி நிறைவு நாள் முகாம்: பயனாளிகளுக்கு ரூ.2¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
பெரியவடகரை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.2¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாந்தா பல்வேறு துறை வாயிலாக 212 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- பெண்களுக்கான தகுதியான வயது வந்த பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான் உடலளவிலும், மனதளவிலும் அவர்கள் உரிய பக்குவம் பெற்றவர்கள் ஆவார்கள். பெற்றோர்கள் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று கூறினார்.
முகாமில் 84 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய 49 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மனோகரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாரதிதாசன், தாசில்தார்கள் பாரதிவளவன், முத்துக்குமரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story