விவசாயியை கொலை செய்த தந்தை- மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
நிலப்பிரச்சினை தொடர்பான முன்விரோதத்தில் விவசாயியை கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கீழமாத்தூர் நடுதெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி வைரம் (வயது 65). இவருக்கும், கீழமாத்தூர் வடக்குதெருவை சேர்ந்த கொளஞ்சிநாதனுக்கும் (53) இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் கீழமாத்தூர் அருகேயுள்ள அந்த பிரச்சினைக்குரிய நிலம் தொடர்பாக இருதரப்புக்கும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடந்தது.
இந்நிலையில் கொளஞ்சிநாதன், அவரது மனைவி முத்தம்மாள் (48), மகன் சின்னையன் என்கிற ராஜசேகரன் (24), மகள் ரம்யா (27), உறவினர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி புதுக்குளத்தை சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடந்த 13-9-2015 அன்று அந்த பிரச்சினைக்குரிய நிலத்தில் கம்பிவேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த வைரம் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் தனது மகன்கள் இளவரசன் (26), திருமால், ஜெயராமன் மற்றும் மருமகள்கள் சுகந்தி, அம்பிகா ஆகியோருடன் அங்கு சென்று கம்பிவேலி அமைத்து கொண்டிருந்தவர்களை தட்டி கேட்டார்.
இதில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறானது. அப்போது கொளஞ்சிநாதன், ஜெயகுமார், சின்னையன் உள்ளிட்டோர் சேர்ந்து அங்கு குழிதோண்டுவதற்காக வைத்திருந்த இரும்பு கம்பிகள், உருட்டு கட்டைகள் ஆகியவற்றை கொண்டு வைரம், இளரவசன் உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இளவரசன் சம்பவ அடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கொலை செய்யப்பட்ட இளவரசன், குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீஸ் நிலையத்தில் வைரம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு இந்திய தண்டனை சட்டபிரிவு 302 (கொலைகுற்றம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கொளஞ்சிநாதன், ஜெயகுமார், சின்னையன், முத்தம்மாள், ரம்யா ஆகியோரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு மூலம், கொளஞ்சிநாதன், ஜெயகுமார், சின்னையன் ஆகிய 3 பேர் மீதும் சுமத்தப்பட்ட கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் முத்தம்மாள், ரம்யா ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால் அவர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
முன்னதாக தீர்ப்பு வெளியானதும் தண்டனை விவரம் பற்றி குற்றவாளிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது கொளஞ்சிநாதன் உள்பட 3 பேரும் தங்களது குடும்பசூழலை எடுத்துக்கூறி தண்டனையை குறைத்து வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனையும் பரிசீலித்து பார்த்த பின் முடிவில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை உகந்தது தான் என நீதிமன்றம் தீர்மானித்தது. அப்போது அங்கு நின்ற முத்தம்மாள், ரம்யா ஆகியோர் கதறி அழுதனர். இதையடுத்து குன்னம் போலீசார், கொளஞ்சிநாதன் உள்பட குற்றவாளிகள் 3 பேரையும் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story