கூட்டுறவு சங்க தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


கூட்டுறவு சங்க தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2018 4:15 AM IST (Updated: 16 March 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கூட்டுறவுத்துறையின் சார்பில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந் தெடுப்பதற்கான கூட்டுறவு தேர்தலில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத்தேர்தல் தொடர்பான கையேட்டினை வெளியிட்டு தெரிவித்த தாவது:-

அரியலூர் மாவட்டத்தில் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள 82 கூட்டுறவு நிறுவனங்கள், செயற்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 120 கூட்டுறவு நிறுவனங்கள் என மொத்தம் 202 கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நான்கு நிலைகளில் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, முறையே வருகிற ஏப்ரல் மாதம் 2, 7, 16-ந்தேதி மற்றும் 23-ந்தேதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், கூடுதல் பதிவாளர் (தேர்தல்) அந்தோணிசாமி பீட்டர்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மண்டல இணைப்பதிவாளர்-கூட்டுறவு தேர்தல் பார்வையாளர் தயாளன், துணைப்பதி வாளர்-மாவட்ட கூட்டுறவு தேர்தல் அலுவலர் செல்வராஜ், பெரம்பலூர் மாவட்ட இணைப்பதிவாளர் பெரியசாமி, துணைப்பதிவாளர் பாண்டிதுரை, மாவட்ட கூட்டுறவு தேர்தல் அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் அலு வலர் கலந்து கொண்டனர். 

Next Story