சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது


சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 16 March 2018 2:45 AM IST (Updated: 16 March 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி,

வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை மறுநாள் காலை வரை நீடித்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

குளிக்க அனுமதி

இந்த நிலையில் நேற்று குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யவில்லை. காலையில் இருந்தே வெயில் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது, சீசன் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. குறைந்த அளவே விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–

பாபநாசம் –26, தென்காசி –20, சங்கரன்கோவில் –20, ஆய்குடி –16, நாங்குநேரி –11, சேரன்மாதேவி –10, சிவகிரி –7, நெல்லை –5, அம்பை –2, சேர்வலாறு –1.

Next Story