31-ந் தேதிக்குள் வருமான வரி படிவத்தினை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
அரசு துறை அலுவலர் கள் வருகிற 31-ந் தேதிக்குள் வருமான வரி படிவத்தினை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் வருமான வரி படிவத்தினை இணைய தளத்தில் பதிவு செய்வது குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வருமான வரி செலுத்துபவர்கள் செலுத்துபடிவத்தை வழங்கிவிட்டு உடனடியாக ஆன்லைன் மூலம் இணைய தளத்தில் அவசியம் பதிவு செய்திட வேண்டும். இதனால் வருமான வரி சட்டத்தின்படி நேர்மையான வரி செலுத்துபவராக உருவாகிடலாம். வருமான வரி சட்டத்தின்கீழ் அபராதம் மற்றும் வழக்கு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம். வணிகம் மற்றும் தொழில் சார்ந்த மூலதன இழப்புகளை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்ல இயலும். வங்கி கடனை நாடும் போது நிதிநிலைக்கு ஒரு நல்ல ஆதாரமாக அமையும்.
இணையதளத்தில் பதிவு செய்ய http://in-c-o-m-et-ax-i-n-d-i-a-e-f-i-l-i-ng.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிப்பவரது பெயர், பேன்கார்டு, பிறந்த தேதி, தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளை பதிவு செய்து உங்களுக்கான ரகசிய எண் உருவாக்கி பதிவு செய்திடலாம். அரசுத்துறை அலுவலர்கள் 2016-2017 மற்றும் 2017-2018-ம் நிதியாண்டிற்கான வருமான வரி படிவம் பதிவு செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும். இந்த கடைசி நாளுக்குள் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் திருச்சி இணைய ஆணையர் (வருமானவரித்துறை) நவீன்குமார், வருமானவரித்துறை அலுவலர்கள் கண்ணன் (திருச்சி), சுந்தரபாண்டியன் (கரூர்), பாலையா(கரூர்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story