காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்
கோவை உழவர் சந்தையில் காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு, சுவிட்சர்லாந்து நாட்டு தூதர் ஆண்ட்ரியாஸ் பாம் அடிக்கல் நாட்டினார்.
கோவை,
சுவிட்சர்லாந்து நாட்டின் இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கான தூதர் ஆண்ட்ரியாஸ் பாம் நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் அவரை வரவேற்றார்.
மாநகராட்சியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப்பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி தனி அதிகாரியுடன் கலந்துரையாடினார். பின்னர் மாநகராட்சி நுழைவு வாசல் முன்பு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ‘கெப்பாசிட்டீஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு இருந்த காற்றின் மாசு கணக்கிடும் கருவியின் தகவல் பலகையினை ஆண்ட்ரியாஸ் பாம் திறந்து வைத்தார்.
கோவை, ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோட்டில் உள்ள உழவர் சந்தையில் 1 டன் எடையுள்ள காய்கறி கழிவுகள் மற்றும் குப்பையிலிருந்து பயோ கியாஸ்(மீத்தேன் வாயு) உருவாக்கி அதன் மூலம் மின் உற்பத்தி செய்து உழவர் சந்தையிலுள்ள விளக்குகளுக்கு மின்சாரம் பயன்படுத்தும் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.35 லட்சம் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைக்கும் வகையில் அடிக்கல் நாட்டினார். பின்னர் உழவர் சந்தையில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதையும், பொதுமக்களுக்காக குறைந்த விலையில் விவசாயிகளின் மூலமாக காய்கறிகள் விற்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டார்.அப்போது ஆண்ட்ரியாஸ் பாம் நிருபர்களிடம் கூறியதாவது.
உலக வெப்ப மயமாதல், பருவ நிலை மாற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆராய்ச்சிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசு நிதி உதவி செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கோவை, சிலிகுரி, ராஜ்கோட், உதய்பூர் ஆகிய 4 நகரங்களை தேர்வு செய்து நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கப்படுகிறது.
கோவையில் சூன்யா திட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து தூய்மை பணிகளை செய்து வருகிறோம். இங்கு உழவர் சந்தையில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தூய்மை இந்தியா திட்டத்திலும், சூன்யா திட்டத்திலும் கோவை மேற்கு மண்டல பகுதிகளான 22 மற்றும் 24 வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தள்ளுவண்டிகள், குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களை கோவை மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆண்ட்ரியாஸ் பாம் வழங்கினார்.மேலும் மரக்கன்றுகளையும் நட்டார். இந்த நிகழ்ச்சிகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் முகமை வளர்ச்சி மற்றும் கூட்டுறவு தலைவர் மேரி லாரர் கிரெட்டஸ், கோவை மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story