நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு


நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 16 March 2018 4:15 AM IST (Updated: 16 March 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவில்வெண்ணி ஊராட்சியில் பயனாளி ஒருவர் ரூ.12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் இல்ல கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து எடக்கீழையூர் பம்பாளி தெருவில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகள் தலா

ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, கட்டிட பணிகள் குறித்தும், அரசின் மூலம் இதுவரை வழங்கப்பட்ட தொகை ஆகியவற்றை பற்றியும் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் செல்வராஜ், ஒன்றிய ஆணையர் ஜீலியெட்ஜெயசிந்தாள், கூடுதல் ஆணையர் ஞானம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். முன்னதாக நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். வளர்ச்சி பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.


Next Story