தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டி யானை
வனப்பகுதியை விட்டு வெளியே வந்தபோது தண்ணீர் தொட்டிக்குள் குட்டியானை தவறி விழுந்தது. அதை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்த்தனர்.
துடியலூர்,
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யானைகள் வசிக்க ஏற்ற இடமாக உள்ளது. இதனால் இங்கு ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அத்துடன் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் யானைகளுக்கு கோவை மாவட்ட வனப்பகுதி வலசை பாதையாக (வழிப்பாதை) இருப்பதால், ஏராளமான காட்டு யானைகள் சென்று வருகின்றன.
அந்த காட்டு யானைகள் மலையடிவார பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அவற்றை தடுக்க மலையடிவாரத்தில் அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைந்த பகுதி வழியாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக தண்ணீர் தேடிதான் யானைகள் ஊருக்குள் வருவதால், வனத்துறை சார்பில் வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
கோவையை அடுத்த சின்னத்தடாகம் அருகே மலையடிவாரத்தில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே இருக்கும் லலிதாம்பிகை கோவிலுக்கு சொந்தமாக 10 அடி ஆழமுள்ள தரைமட்ட அளவிலான தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் தண்ணீர் இருந்தது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 3.45 மணியளவில் வனப்பகுதியை விட்டு 5 காட்டு யானைகள் ஒரு குட்டி யானையுடன் வெளியே வந்தன. பின்னர் அந்த யானைகள் தண்ணீர் தேடி அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்தன. அப்போது இந்த தொட்டிக்குள் தண்ணீர் இருந்ததால், அதை நோக்கி வந்தன. அப்போது திடீரென்று குட்டி யானை அந்த தொட்டிக்குள் தவறி விழுந்தது.
இதையடுத்து மற்ற யானைகள் அனைத்தும் சேர்ந்து அந்த குட்டி யானையை தண்ணீர் தொட்டிக்குள் இருந்து தூக்க முயன்றன. ஆனால் முடியவில்லை. இதனால் அந்த யானைகள் அனைத்தும் சத்தமாக பிளிறியது. யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அந்த கோவிலில் இருந்த நபர் ஒருவர் வெளியே வந்து எட்டி பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் குட்டியானை தத்தளிப்பதையும், அதை சுற்றிலும் காட்டு யானைகள் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு நின்றிருந்த காட்டு யானைகளை அங்கிருந்து துரத்தினார்கள். ஆனால் தாய் யானையை தவிர மற்ற யானைகள் அங்கிருந்து சென்றன. தாய் யானை மட்டும் அங்கிருந்து செல்லாமல், வனத்துறையினரை அந்த தொட்டியின் அருகில் விடாமல் துரத்தியது.
இதனால் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தனர். அத்துடன் யானைகளை விரட்டும் வாகனமும் அங்கு வரவழைக்கப்பட்டது. அதன் சத்தத்தை கேட்டதும், தாய் யானை அங்கிருந்து சற்று தூரத்துக்கு சென்று, குட்டி யானை விழுந்த தண்ணீர் தொட்டியை நோக்கி பார்த்துக்கொண்டே இருந்தது.
உடனே வனத்துறையினர் அந்த தொட்டியின் ஒரு பகுதியை உடைத்து, வெளிப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி குட்டி யானை வெளியே வர வழி ஏற்படுத்தினார்கள். அத்துடன் வனத்துறையினர் சிலர் துணிச்சலாக தொட்டிக்குள் இறங்கி, தண்ணீருக்குள் தத்தளித்து கொண்டு இருந்த குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பிறகு அந்த குட்டி யானை, உடைக்கப்பட்ட பகுதி வழியாக எளிதாக வெளியே வந்தது.
பின்னர் அந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த குட்டி, தாய் யானையுடன் செல்லாமல், மீண்டும், மீண்டும் தண்ணீர் தொட்டியை நோக்கி ஓடியது. இருந்த போதிலும் வனத்துறையினர் அந்த குட்டி யானையை மலையடிவாரத்தில் நின்றிருந்த அதன் தாய் யானையின் அருகில் கொண்டு விட்டனர்.
அப்போது குட்டியை பார்த்ததும், தாய் யானை ஓடி வந்து, அதை தனது துதிக்கையால் அணைத்து பாச மழை பொழிந்தது. அத்துடன் அதற்கு பாலும் கொடுத்தது. பின்னர் மற்ற யானைகள் அனைத்தும் சேர்ந்து அதை அணைத்தபடி வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்றது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டி யானை பிறந்து ஒரு மாதம்தான் இருக்கும். தண்ணீர் தொட்டி அருகே சூழ்ந்து இருந்த காட்டு யானைகளை நாங்கள் துரத்தியதும், சிறிது தூரம் சென்று தாய் யானை, குட்டியை நாங்கள் மீட்பதை பார்த்துக்கொண்டே இருந்தது. நாங்கள் அதை மீட்டு அதனுடன் சேர்த்ததும், காலை வேகமாக தரையில் உதைத்து பிளிறியபடி அந்த குட்டியை தன்னுடன் சேர்த்துக்கொண்டு வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்றது’ என்றனர்.

Related Tags :
Next Story