ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் தரமான சாலை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பணையில் சாலை
ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த தடுப்பணை அமைந்து உள்ளது. இதன் மீது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணையின் மீது ரூ.4 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது தடுப்பணையின் இருபுறமும் சுமார் 2 அடி அகலத்தில் இடைவெளி விட்டு, நடுவில் சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இரவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வெள்ளூரைச் சேர்ந்த மளிகை கடைக்காரர் முருகன் (வயது 55) நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார். இதேபோன்று அந்த சாலையில் கணவருடன் சைக்கிளில் சென்ற பெண்ணும் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். தொடர்ந்து தடுப்பணையின் இருபுறமும் வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது.
பொதுமக்கள் முற்றுகை
நேற்று காலையில் பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர், தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை பார்வையிட்டனர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள், தடுப்பணை முழுவதும் சீராக தரமான சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், கூடுதலாக ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்து, ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை முழுவதும் சீராக சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து மாலையில் தடுப்பணை முழுவதும் சீராக சாலை அமைக்கும் பணி நடந்தது.

Related Tags :
Next Story