பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் தொழிலாளி தற்கொலை


பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2018 3:45 AM IST (Updated: 16 March 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்தி வேலூர்,

பரமத்தி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேபிசகிலா (38). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சச்சிதானந்தம் தனது மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சச்சிதானந்தம் வீட்டின் உள் அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த அவரது மனைவி மற்றும் அருகில் இருந்தவர்கள் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பரமத்தி போலீசார், சச்சிதானந்தத்தின் உடலை கைப்பற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story