தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது


தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 16 March 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

வணிக நல வாரியம் பற்றி அறிவிப்புகள் இல்லாத நிலையில் தமிழக பட்ஜெட் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது என தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

மதுரை,

தமிழக துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில், கோவையில் மெட்ரோ ரெயில் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் மாநிலத்தின் 2-வது பெரிய நகரமும், போக்குவரத்து சிக்கல் அதிகமுள்ள நகரமான மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

வணிகர் நலனுக்காக அமைக்கப்பட்ட வணிக நல வாரியம் கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. உடனடியாக அந்த வாரியத்தை புதுப்பித்து செயல்பாடுகளை தொடங்க வேண்டும். அதுபற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு நிதியை தமிழக அரசு எங்கிருந்து பெறப்போகிறது என தெரியவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் குறித்து தமிழக மதச்சார்பற்ற ஜனதாதள பொது செயலாளர் ஜான்மோசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பட்ஜெட்டில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த திட்டமும் இல்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, நெல், கரும்பு பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்றவற்றுக்கு எந்த முன் திட்டமும் இல்லை. வேலையில்லா இளைஞர்களுக்கு வழிகாட்டும் திட்டங்கள் பற்றி அறிவிப்பு இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றம் தருவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Next Story