பூட்டை உடைத்து கடைகளில் திருடிய 2 பேர் பிடிபட்டனர் ‘யூ-டியூப்’பில் வீடியோ பார்த்து கைவரிசை
பூட்டை உடைத்து கடைகளில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ‘யூ-டியூப்’பில் வீடியோ பார்த்து கைவரிசையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மும்பை,

கடைகளில் திருட்டு
மும்பை அந்தேரி கிழக்கு ஜோகேஸ்வரி லிங்க் ரோட்டில் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் 22-ந்தேதி மர்மநபர்கள் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம், செல்போன்கள், பீர்பாட்டில்களை திருடிச்சென்றனர். இது குறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் எம்.ஐ.டி.சி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையில் கடந்த 8-ந்தேதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையில் இருந்த பணம், பொருட்களை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் சந்தேகப்படும் வகையில் 2 பேர் கோணிப்பையை தூக்கிச்சென்றதை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்களின் பெயர் அர்மான்கான்(வயது20), ரயீஸ்கான்(24) என்பதும், அவர்கள் தான் மதுபான கடை உள்பட 2 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் ‘யூ-டியூப்’பில் வீடியோ பார்த்து பூட்டை எப்படி உடைக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, கடைகளில் கைவரிசையில் ஈடுபட்டு வந்ததாக கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Tags :
Next Story