2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் பலத்தில் மாற்றம் வரும்
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் பலத்தில் மாற்றம் ஏற்படும் என்று சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,

இடைத்தேர்தல் தோல்வி
உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக இருந்த கோரக்பூர், மவுரியா புல்பூர் ஆகிய எம்.பி. தொகுதிகளும், பீகார் மாநிலம் அராரியா எம்.பி. தொகுதிக்கும் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
3 தொகுதிகளிலும் பா.ஜனதா படுதோல்வியை தழுவியது. இதில் கோரக்பூர் எம்.பி. தொகுதி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வி குறித்து மத்திய மற்றும் மராட்டிய அரசுகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் விமர்சித்து கூறியிருப்பதாவது:-
மாற்றம் வரும்...
உத்தரபிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. மக்கள் தற்போது மாய உலகத்தில் இருந்து வெளியேற தொடங்கிவிட்டனர். அவர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்துவிட்டனர்.
பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையில் பா.ஜனதா கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 280 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியால் 50 இடங்களை கூட பெற முடியவில்லை. மற்ற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தும் 150 தொகுதிகளை கூட எட்ட முடியவில்லை. வரும் 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த நிலை நிச்சயமாக மாறும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதை காண முடிகிறது. இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தொடர்ந்து பிரதமராகும் கனவுடன் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story