கல்லங்குளம் கண்மாய் நீர்வரத்து ஓடைகளில் மண் அள்ள அனுமதிக்க கூடாது
நீர்வரத்து ஓடைகளில் மண் அள்ள அனுமதிக்க கூடாது
விருதுநகர்,
காரியாபட்டி அருகே உள்ள கல்லங்குளம் கண்மாய்க்கான 3 நீர்வரத்து ஓடைகளில் மண் அள்ளுவதற்கு அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் விஜயமுருகன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காரியாபட்டி அருகே கல்லங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாய் மூலம் சத்திரம்புளியங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இந்த கண்மாய்க்கு 3 நீர்வரத்து ஓடைகள் உள்ளன. இந்த கண்மாயில் நீர் பெருகி உபரி நீர் மேலும் சில கண்மாய்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் உள்ளன.
தற்போது இந்த 3 நீர்வரத்து ஓடைகளிலும் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனுமதி பெற்றுள்ளவர்கள் இந்த ஓடையை சுற்றி வேலி அமைத்துள்ளனர். மேலும் பட்டா நிலத்தில் ஓடை உள்ளதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ஓடையில் மண் அள்ளுவதற்கு அனுமதித்தால் கல்லங்குளம் கண்மாய்க்கு நீர் வருவது பாதிக்கும்.
இதனால் சத்திரம்புளியங் குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி இல்லாமல் பாலைவனமாக மாறி விடும். மேலும் வறண்ட இந்த பகுதியில் விவசாயத்தை நம்பியுள்ள கிராம மக்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை ஏற்பட்டு விடும். எனவே கல்லங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாய் நீர் வரத்து ஓடைகளில் மண் அள்ளுவதற்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story