கிராமச்சாலை சீரமைப்பு பணியை முறையாக கண்காணிக்க வேண்டும்
கிராமச்சாலைகள் சீரமைப்பு பணியை முறையாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழக அரசு கிராமப்புற மக்களுக்கு உரிய பஸ் போக்குவரத்து வசதி செய்து கொடுப்பதற்காக கிராமச்சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்டம் முழுவதும் தங்களது கிராமங்களுக்கான சாலைகளை சீரமைக்க வேண்டும் எனமக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் கிராமச்சாலைகள் சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் போதிய அக்கறை காட்டாத நிலையே நீடிக்கிறது.
எரிச்சநத்தத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரையிலான சாலையில் தேவர்சாலை விலக்கில் இருந்து கள்ளிப்பட்டி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திலான கிராமச்சாலை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ரூ.49½ லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணி முடிந்து 3 மாதங்களுக்குள் இந்த சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டதாக அப்பகுதியில் உள்ள கிராமமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சாலை சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரிடம் இந்த சாலையை மீண்டும் சீரமைக்க உத்தரவிட வேண்டும் என கிராம மக்கள் கோரி உள் ளனர்.
இது போன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் கிராமச்சாலைகள் சீரமைப்பு பணிகள் முறையாக கண்காணிக்கப்படாததால் சீரமைக்கப்பட்ட சாலைகள் பணி முடிந்த குறைந்த கால அவகாசத்திலேயே சேதம் அடைந்து போக்குவரத்துக்கு தகுதியில்லாமல் ஆகிறது. இதனால் குறிப்பிட்ட கிராமங்களுக்கு செல்லும் பஸ்வசதியும் பாதிக்கப்படுகிறது. எனவே சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது அதனை முறையாக கண்காணிக்க உரிய நடவடிக்கை தேவைப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறையினர் இந்த கண்காணிப்பு பணியை முறையாக மேற்கொள்ளாத நிலையே உள்ளது. எனவே மாவட்டநிர்வாகம் கிராமச்சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து சீரமைப்பு பணிகள் முறையாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தரம் இல்லாத சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்கள் மீது விதிமுறைப்படி உரியநடவடிக்கை எடுப்பதுடன் இந்த கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மீதும் துறைரீதியானநடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூர்சாகிபுரம் வழியாக பெருமாள் தேவன்பட்டி செல்லும் சாலை முழுவதுமாக சேதமடைந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தும் இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story