பகலில் கிரகங்கள் தெரியுமா?


பகலில் கிரகங்கள் தெரியுமா?
x
தினத்தந்தி 16 March 2018 1:00 PM IST (Updated: 16 March 2018 1:00 PM IST)
t-max-icont-min-icon

சில கிரகங்களை பகலில் பார்க்க முடியும். பகல் பொழுதின் உச்சி வேளையில் சூரியனின் ஒளி கண்கள் கூசுமளவு இருக்கும்போதும் கிரகங்களைப் பார்க்க முடியும்.

கிரகங்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது. தொலைநோக்கி மூலமாகப் பார்க்க முடியும். குறித்த நேரத்தில், நல்ல சுற்றுச் சூழல் அமைந்த இடங்களில் சில கிரகங்களை வெறும் கண்களாலும் பார்க்க முடியும்.

அதிக ஆற்றல் இல்லாத தொலை நோக்கிகளைக் கொண்டே வானிலை வல்லுனர்கள் பகல் பொழுதில் கிரகங்களைப் பார்க்கின்றனர். தொலைநோக்கி மூலமாக பகலில் வியாழனை பார்க்க முடிகிறது. அதன் அடையாளங்களான பட்டைகளையும் காண முடியும். புதன் கிரகத்தையும் பகலில் பார்க்க முடியும். ஆனால் அது அடிவானத்திற்கு மேல் மிகவும் உயரத்தில் இருக்கும்போது பார்ப்பது எளிது. சூரியன் மறைந்த பிறகு அது வானில் மிகவும் தாழ்நிலைக்கு வந்துவிடுகிறது. அப்போது அதைப் பார்ப்பது கடினம். பூமியின் வாயு மண்டலம், அதன் பிம்பத்தை மறைக்கிறது. சொல்லப்போனால் அதன் உருவத்தை மாற்றிவிடுகிறது.

நல்ல சூழ்நிலையில் சில கிரகங்களை தொலைநோக்கி உதவியின்றி பார்க்க முடியும். ஆனால் கிரகங்களைப் பார்ப்பதற்கு ஒரு அடிப்படையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவை இருக்கும் திசையை தெரிந்து பார்த்தால் அந்த கிரகங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

எல்லாவற்றிலும் பிரகாசமான வெள்ளி கிரகத்தை பகல் பொழுதில் எளிதில் காண முடியும். அப்போது அது மிக ஒளியுடன் பிரகாசிக்கும். பண்டைய வரலாற்று ஆசிரியர்கள் பகல் பொழுதில் தாம் வெள்ளியைக் கண்ட அனுபவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளனர். மாவீரன் நெப்போலியன் நகர் வலம் வந்தபோது மக்கள் அவரைப் பார்க்காமல் வெள்ளி தெரிவதை ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இது நெப்போலியனுக்கு மிகுந்த கோபத்தையும், அவமானத்தையும் தந்ததாக சொல்கிறார்கள்.

பகல்பொழுதில் வெள்ளி தெரிந்தாலும், அது எல்லா காலத்திலும் அப்படித் தெரிவதில்லை. 8 வருடங்களுக்கு ஒரு முறை பகலில் பார்க்கும்படியாக வெள்ளி பிரகாசிக்கும். சூரிய குடும்ப கோள்களில் வெள்ளியே பிரகாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story