குதிரைகளிடம் கோபப்படாதீர்கள்..!


குதிரைகளிடம் கோபப்படாதீர்கள்..!
x
தினத்தந்தி 16 March 2018 2:00 PM IST (Updated: 16 March 2018 1:34 PM IST)
t-max-icont-min-icon

பிரிட்டனைச் சேர்ந்த உளவியலாளர்கள், குதிரைகளால் மனிதர்களின் முகபாவனைகளை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

 28 குதிரைகளிடம் கோபமான ஆண்களின் புகைப்படங்களைக் காட்டியபோது, அவை கோபத்தை வெளிப்படுத்தின. இதன் மூலம் குதிரைகளால் கோபத்தையும், மகிழ்ச்சியையும் புரிந்துகொள்ள முடிகிறது என்பதை முதல் முறை அறிவித்திருக்கிறார்கள். இந்தச் சோதனையில் பங்கேற்ற குதிரைகளுக்கு ஏற் கனவே பயிற்சி அளிக்கப்படவில்லை.

மனிதர்களின் கோபமான முகங்களைக் காணும்போது குதிரைகளின் இதயம் வேகமாகத் துடிக் கிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது என்கிறார் கள்.

விலங்குகள் ஆராய்ச்சியாளரான ஏமி ஸ்மித், “குதிரைகள் நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்களை அதிகமாக வெளிப்படுத்துகின்றன. நீண்ட காலம் மனிதர்களோடு குதிரைகள் வசித்து வந்தாலும் தற்போதுதான் இந்தக் கண்டு பிடிப்பை நிகழ்த்த முடிந்திருக்கிறது” என்கிறார்.

Next Story