ரூ.1.65 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி


ரூ.1.65 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி
x
தினத்தந்தி 17 March 2018 4:45 AM IST (Updated: 16 March 2018 10:52 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.1.65 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகனம்பட்டியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி படித்து வருகின்றனர். சில குறிப்பிட்ட பாட வகுப்புகளுக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதனால் இந்த கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட தமிழக அரசின் உயர் கல்வித்துறை சார்பில் ரூ.1 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், தர்மபுரி துணை கலெக்டர் ராமமூர்த்தி, காரிமங்கலம் தாசில்தார் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடரமணன், வடிவேலன், கல்லூரி முதல்வர் எழிலன், துணை முதல்வர் செந்தில் குமார், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story