இந்திய எல்லையில் இருந்து தனுஷ்கோடி வரை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாருடன் கடலில் நீந்தி விழிப்புணர்வு பிரசாரம்
மாணவர்கள் நீச்சல் போட்டியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாருடன் இந்திய எல்லையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ராமேசுவரம்,
ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முன்தினம் ராமேசுவரத்துக்கு வந்து ரெயில் நிலையம், பாம்பன் தூக்குப்பாலம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். பின்னர் இரவு மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை முகாம் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
நேற்று காலை பைபர் படகு ஒன்றில் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இன்ஸ்பெக்டர் இருதயம் மற்றும் போலீசார் ஜெயக்குமார், சதீஷ்குமார், விமல், பிரபு, மகிமைதர் உள்பட 18 பேர் இந்திய கடல் எல்லைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி வந்தனர். இவர்களுக்கு பாதுகாப்பாக மீனவர்களும், கடலோர காவல்படையினரும் படகில் வந்தனர்.
இவர்கள் சுமார் 5 நாட்டிக்கல் மைல் தூரத்தை 2¾ மணி நேரத்தில் நீந்தி கரை சேர்ந்தனர். அவர்களை ராமேசுவரம் கடற்படை கமாண்டர் குர்சித்சிங் மற்றும் மீனவர்கள் வரவேற்றனர்.
பின்னர் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்ற விளையாட்டுகளை போல நீச்சல் போட்டியிலும் ஆர்வம் காட்ட வேண்டும். நீச்சலில் தேர்ந்தவர்களாக திகழ வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாக நாங்கள் நீந்தி வந்தோம். ஏற்கனவே தூத்துக்குடியில் இருந்து வான் தீவு வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை பலமுறை நீந்தி கடந்துள்ளோம். இதேபோல சென்னை கோவளத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் நீச்சல் அடித்துள்ளோம். அங்கு நீந்துவதற்கும், தனுஷ்கோடியில் நீந்துவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
இந்த பகுதியில் கடல் நீரோட்டம், அலை போன்றவை அதிக அளவில் உள்ளன. அதேபோல அரிப்பை ஏற்படுத்தக்கூடிய ஜெல்லி மீன்கள், கடல் பாம்பு ஆகியவை உள்ளன. இதனால் பாதுகாப்புக்காக ரசாயனம் கலந்த எண்ணெய்யை உடலில் பூசியிருந்தோம்.
விரைவில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்துவதற்கு திட்டம் உள்ளது. நீச்சலில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story