முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கூடலூர்,
தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களின் நீர்ப்பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. லோயர்கேம்ப் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் உற்பத்திக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு இருக்கிறது.
அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதையொட்டி நேற்று காலை முதல் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி.
நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 113.50 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 386 கன அடியாக உள்ளது. மொத்த நீர் இருப்பு 1,476 மில்லியன் கன அடி.
இதே போல் வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. நேற்றைய நீர்மட்டம் 32.19 அடி. அணைக்கு வினாடிக்கு 40 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மொத்த நீர் இருப்பு 463 மில்லியன் கனஅடி. மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 31.95 அடி. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றப்படவில்லை. அணையில் மொத்த நீர் இருப்பு 94.44 மில்லியன் கனஅடி.
சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126 அடி. நேற்றைய நீர்மட்டம் 60.18 அடி. நீர்வரத்து வினாடிக்கு 4 கனஅடியாகவும், வினாடிக்கு 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மொத்த நீர் இருப்பு 22.51 மில்லியன் கனஅடி.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில் வருமாறு):- பெரியாறு அணை-22, தேக்கடி-11.8.

Related Tags :
Next Story