3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 March 2018 3:15 AM IST (Updated: 17 March 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 3 வயது சிறுமிக்கு நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 78). இவர், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படிக்கும் 3 வயது சிறுமியை, நேற்று முன்தினம் தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அழுது கொண்டே வீட்டுக்கு வந்த சிறுமி நடந்த வி‌ஷயத்தை பெற்றோரிடம் கூறினாள்.

உடனே அவர்கள் பொதுமக்களின் உதவியுடன் மாரிமுத்துவை பிடித்து தர்ம அடி கொடுத்ததுடன் தாடிக்கொம்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார் அவரை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், நேற்று அங்குள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது, பள்ளியின் அருகே உள்ள மேல்நிலைத்தொட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதுடன் காவலாளியையும் நியமிக்க வேண்டும். குற்றவாளி மாரிமுத்துவுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் வழங்கக்கோரி திண்டுக்கல்–பழனி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தாடிக்கொம்பு போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story