கயத்தாறு அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினார்


கயத்தாறு அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினார்
x
தினத்தந்தி 17 March 2018 2:00 AM IST (Updated: 17 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் கொலை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தலைவன்கோட்டையைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 50). இவர் மராட்டிய மாநில மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக வேலை செய்தார். இவருடைய மனைவி குட்டியம்மாள் (42). இவர்களுடைய மகன் சுரேஷ் (20). குட்டியம்மாள், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு கோனார்கோட்டையில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். கடந்த 14–4–2016 அன்று குட்டியம்மாள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 37 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமசாமி தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராமசாமியை போலீசார் தேடி வந்தனர்.

கணவர் கைது

மனைவியை கொலை செய்ததால், ஒயர்மேன் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ராமசாமி, பல்வேறு ஊர்களில் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் நேற்று காலையில் கயத்தாறு அருகே நாகலாபுரம் விலக்கு பகுதியில் வந்தார். அப்போது அங்கு ரோந்து சென்ற கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் ராமசாமியை கைது செய்தனர்.

மனைவியை கொலை செய்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கணவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story